2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

53 மில். டொலர்களை விடுவிக்க தீர்மானம்

Freelancer   / 2022 ஜனவரி 25 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு எரிபொருள் கப்பல்களுக்குத் தேவையான 53 மில்லியன் டொலர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் கம்மன்பில மேலும் தெரிவித்ததாவது,

35,000 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் 37,500 மெற்றிக் தொன் டீசலை பெற்றுக்கொள்வதற்கே இலங்கை மத்திய வங்கியினால் இந்த டொலர்கள் விடுவிக்கப்படவுள்ளன.

கப்பலிலிருந்து டீசல் பெற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், டீசல் மற்றும் உலை எண்ணெய் மூலம் மின் உற்பத்தி நிலையங்களை இயக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

டீசலில் இயங்கும் வெஸ்ட் கோஸ்ட் அனல்மின் நிலையம் உலை எண்ணெயில் இயங்கும் அதே வேளையில், சப்புகஸ்கந்த அனல்மின் நிலையத்தின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு உலை எண்ணெய் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கம்மன்பில தெரிவித்தார்.

மின்சாரம் வழங்குவதற்கு தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெயைப் பெறுவதற்கு இந்தியாவிடம் இருந்து இலங்கை மின்சார சபை கடன் வசதியைப் பெறும் என தெரிவித்த எரிசக்தி அமைச்சர், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இது தொடர்பில் தற்போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .