Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு வருவதற்காக இவங்கையைச் சேர்ந்த 7,000 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் வெளிநாடுகளில் காத்திருப்பதாகவும் அவர்கள் அனைவரும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் இன்னும் சில வாரங்களுக்குள் அழைத்து வரப்படுவர் என, வெளியுறவுத்துறையின் ஜனாதிபதிக்கான மேலதிக செயலாளர் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் பேராசிரியர் ஜயந்த கொலம்பகே தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களைத் தவிர, மொத்தம் 27,000 இலங்கையர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்புவதற்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தெற்காசிய நாடுகள் உள்ளிட்ட சார்க் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர்க்கல்வியைத் தொடர்ந்து வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர்கள் அனைவரும் இலங்கைக்கு திரும்பிய பின்னரே, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பா, ரஷ்யா ஆகிய நாடுகளில் கல்வி கற்றும் மாணவர்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் இந்த நாடுகளில் உள்ள பல பல்கலைக்கழங்கள் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
தங்கியிருப்பதற்கு மிகவும் பாதுகாப்பான இடமாக இலங்கையைக் கருதுவதால், இலங்கையர்கள் மாத்திரமன்றி, மற்றைய நாட்டின் பிரஜைகளும், இலங்கைக்கு வருவதற்கான கோிக்கைகளை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago