2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

700 மில்லியன் டொலர்களை சீனா மேலும் வழங்கும்...

Freelancer   / 2022 மே 27 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தமிழ்மிரர் கிழக்கு நிருபர்கள்) 

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சீன மக்கள் குடியரசு தொடர்ந்தும் உதவிகளை செய்து வருகின்றது. இவ்வாண்டு இறுதிக்குள் இலங்கை நாட்டிற்கு மேலும் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீன அரசாங்கம் வழங்குவதற்கு தயாராக இருக்கிறது என்று இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் கியூ சைன்கோன்ங் தெரிவித்தார்.

சீன நாட்டின் யுனான் மாநில மக்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நிவாரணப் பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வுகள், இன்னும் பல நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (26) இடம்பெற்றன. 

கல்முனை மாநகரத்தின் ஆசாத் பிளாஸா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

நட்புறவு நாடு என்ற ரீதியில்,  இலங்கைக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்பதற்கு தேவையான நிவாரணப் பணிகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளோம் என்றார். 

விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான உபகரணங்களை வழங்கி வைத்துள்ளோம். பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களாகிய உங்களின் வயிற்றுப் பசிகளை நன்கு அறியமுடிகிறது. எதிர்காலத்தில் முடியுமான உதவிகளை இந்த மக்களுக்கு செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.

எங்களை அன்பாக வரவேற்று உபசரித்த கல்முனை வாழ் மக்களுக்கு நன்றிகளை தெரிவிக்கின்றோம் என்றார். 
 
மட்டக்களப்பு விஜயம் 

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு வருகைதந்திருந்த சீன தூதுவர் தலைமையிலான குழுவினர்.  மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன்  தலைமையில் இடம்பெற்ற நிகழ்விலும் கலந்துகொண்டனர். 

இந்த இறுக்கமான சூழலில் சீன அரசினால் இலங்கை பூராகவும் வறிய மக்களுக்காக வழங்கப்பட்டு வருகின்ற  உலருணவு நிவாரணப் பொதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென 2500 பொதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மாவட்டத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளான மீன்பிடி,  விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலான திட்டங்களையும் சீனத் தூதுவரிடம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் முன்வைத்துள்ளனர்.

வந்தாறுமூலை - கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இலங்கைக்கான சீனத்தூதுவர் விஜயம் அங்கு சர்வதேச விவகார அலகினையும் திறந்துவைத்த தூதுவர் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .