2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

Casino Business சட்டத்தில் திருத்தம்

Freelancer   / 2022 ஜூலை 06 , மு.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்), பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவுச் சட்டத்தின் மூலம் இலங்கையில் சீட்டாட்டத் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் சீட்டாட்டத் தொழிலை மேற்கொண்டு செல்வதற்காக உரிமங்கள் வழங்கப்பட வேண்டியிருப்பினும், குறித்த சட்டத்தின் ஒழுங்கேற்பாடுகளை வலுவாக்கம் செய்வதற்கான கட்டளைகள் இதுவரை பிறப்பிக்கப்படாமையால், இதுவரை எந்தவொரு சீட்டாட்டத் தொழிலுக்கு குறித்த சட்டத்தின் கீழ் உரிமங்கள் வழங்கப்படவில்லை.

இந்நிலைமையின் கீழ் தற்போது சீட்டாட்டத் தொழிலை மேற்கொண்டு செல்கின்ற நிறுவனங்களிடமிருந்து முறையான வகையில் குறித்த வரி அறவீடுகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளது.

அதனால், அவ்வாறான வியாபாரங்களை  ஒழுங்குபடுத்துவதற்கு மற்றும் அரசால் அறவிடப்பட வேண்டிய குறித்த வரியை அறவிடும்   சீட்டாட்டத் தொழில்,   பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவுச் சட்டத்தின் கீழ் பொருத்தமான திருத்தங்களை அறிமுகஞ் செய்வதற்கும் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. 

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கே அங்கிகா​ரம் வழங்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .