2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அசாத் சாலி வழக்கின் முழு விவரம்

Freelancer   / 2021 டிசெம்பர் 03 , மு.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனங்களுக்கிடையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ், அதி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி அமில் ரணராஜா, அசாத் சாலியை, நேற்று (02) முழுமையாக விடுதலை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். 

குற்றம் சாட்டப்பட்டிருந்த அசாத் சாலி, மதக் குழுக்களுக்கும் இனங்களுக்கும் இடையில் வெறுப்பு மற்றும் விரோதமான கருத்துக்களை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட போதிலும், அவரது செய்தியாளர் சந்திப்பில் கூறியவற்றை முழுமையாக செவிமடுத்த போது, அத்தகைய தோற்றத்தை காண முடியாது இருந்ததென உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட முழுமையான ஒலிப்பதிவு மற்றும் பல தொலைக்காட்சி சேவைகளில் செம்மையாக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்ட செய்திகள் இரண்டையும் முழுமையாக ஆராய்ந்தேன். கொரோனா நிலைமையின் கீழ், விஞ்ஞான ரீதியிலான எவ்விதமான முடிவுகளையும் எட்டாது, சடலங்கள் எரியூட்டப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும் அத்தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். 

தனது அரசியல் எதிரிகளை விமர்சிப்பது, பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவது உள்ளிட்ட விடயங்களில் எவ்விதமான பாரபட்சங்களுமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார் என்றும் நீதிபதி அறிவித்தார். 

முஸ்லிம் தனிநபர் சட்டம் மற்றும் பிற சட்டங்கள் குறித்தும் அவர் கருத்துரைத்துள்ளார்.  மேலும் முறைப்பாட்டாளர்கள் கூறியதை போல் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, விரோத உணர்வுகளை உருவாக்க முடியுமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டனவா என்பது குறித்தும்  நீதிமன்றம் பரிசீலனை செய்தது என்றும் நீதிபதி தெரிவித்தார். 

முஸ்லிம் தனிநபர் சட்டம் என்பது சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமாகும் என்றும், செய்வதை ஆட்சேபித்துள்ளார் என்றும் குறிப்பிட்ட நீதிபதி, அந்த செய்தியாளர் சந்திப்பில் மதங்கள் அல்லது இனங்களுக்கு இடையே வெறுப்பு மற்றும் விரோதம் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு கருத்துகளும் தெரிவிக்கப்படவில்லை என்றார். 

ஆகையால், மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு சட்டங்களின் கீழும், பிரதிவாதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக மேல்நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. 

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 2021 மார்ச் 16ஆம் திகதியன்று கைது செய்யப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, தடுத்துவைத்தல் கட்டளையின் கீழ் தடுத்துவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .