2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அடுத்தமாதம் அமைச்சரவையில் மாற்றம்?

Niroshini   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை (01), சில கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படவுள்ள நிலையில், அமைச்சரவையிலும்  பாரிய மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேசித்திருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, முழுமையான அமைச்சரவை மாற்றமாக இது அமையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பாலும் வரவு - செலவுத் திட்டத்துக்;குப் பின்னரே அமைச்சரவையில் மாற்றம் நிகழ்வது வழக்கம். இருப்பினும், இம்முறை அதற்கு முன்னதாகவே அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்பட இருப்பதாக தெரியவருகிறது.

இதற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கு முன்னர் விருப்பம் வெளியிடவில்லை என்றாலும், தற்போது அவர் பூரண விருப்பம் வெளியிட்டிருப்பதாக, அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .