2025 நவம்பர் 12, புதன்கிழமை

அதிகார ஆயுதம் ‘பொய்’

Freelancer   / 2025 நவம்பர் 12 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பயன்படுத்தும் முக்கிய  ஆயுதம்தான் பொய். ஆனால், பெற்றுக்கொண்ட அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள அந்த பொய்யை பயன்படுத்த முடியாது.அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க தவறினால் எமது அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என புதிய ஜனநாயகக் கட்சி எம்.பி. ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.
 
பாராளுமன்றில்  செவ்வாய்க்கிழமை (11)  இடம்பெற்ற 2026ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் மீதான 3 ஆம்  நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும்போது அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆளும் தரப்பினர் மொத்தமாக 83 தடவைகள் கைதட்டி வரவேற்றனர். இவ்வாறுதான் நாங்களும் அன்று கைதட்டி வரவேற்றோம். ஆனால் இரவில் நித்திரைகொண்டு எழும்பும்போது எமது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன . எமது அரசாங்கம் இல்லாமல்போயுள்ளது. இவ்வாறு நாங்கள் நினைத்துப்பார்க்காத விடயங்கள் நடக்கின்றன என்பதை  நாங்கள் நினைவில்கொள்ள வேண்டும்.

பொய் என்ற ஆயுதத்தை மக்கள் நம்பப்போவதில்லை.   2025 வரவு- செலவு திட்டத்தில் பிரேரித்த முன்மொழிவுகளில் 50 வீதத்தைக்கூட பூரணப்படுத்தவில்லை என்பதாகும். இதற்கு காரணம் என்ன என்பதைத் தேடிப் பாருங்கள் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X