2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட கோரிக்கை

Freelancer   / 2022 ஜூலை 06 , மு.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கௌரவ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்கள் முன்னிலையில் இறுதியாக ஆற்றிய உரையில் மிக முக்கியமான வாக்குறுதிகளை வழங்கி இருந்தார்.

மிக அண்மையில் அவர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியமை தற்போது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்தை சமர்ப்பித்ததின் ஊடாக அரசாங்கம் எதிர்பார்க்கும் திருத்த செயற்பாடுகளுக்கும் நாட்டின் சிவில் சமூகத்தினர் மற்றும் அரசியல் கட்சிகள் கூறும்  அரசியல் திருத்தத்திற்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டினை தெளிவுபடுத்தி உள்ளார்.

அதன் காரணத்தினால் 2022 மே மாதம் 11 ஆம் திகதி நாட்டு மக்கள் முன்னிலையில் சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்துகின்றது.

அதேபோன்று 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்த்தின் நிலைப்பாடும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே காணப்படும் வேறுபாட்டினை ஒப்பிடுகையில் இந்த திருத்தம் தொடர்பில் நம்பிக்கை வைக்க முடியாது என்பதையும் அறிய தருகின்றோம்.

இதனைத்தொடர்ந்து நாட்டின் நலன் கருதி செயற்படும் அமைப்பு என்ற வகையில் இலங்கையிலும் உண்மையாகவே மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் பொருளாதார மற்றும சமூக சீர்திருத்தங்கள் தொடர்பில் நாம் கொண்ட எதிர்பார்ப்புகளை கைவிடுவதற்கு நாம் தயாராக இல்லை என்பதை வலியுறுத்துகின்றோம்.

அதேபோன்று நாட்டில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களிடமும் சிவில் சமூக அமைப்புகளிடமும் 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டு இருந்த அடிப்படை விடயங்களை மீள அமுலாக்குவதற்கு ஒன்றாக முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் நாட்டினுள் ஏற்பட்டிருக்கும் பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உடனடியாக தீர்வு அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் நாம் கருத்திர் கொள்கிறோம்.

அதற்காக துரித நடைமுறை சாத்தியமான அரசியல் திருத்தங்களை நோக்கி நாட்டை செலுத்தாவிட்டால், மிக மோசமான சூழ்நிலைகள் நாட்டில் ஏற்படலாம் என்று அரசியல் சக்திகளுக்கு எச்சரிக்கை விடுகின்றோம்.

அரசாங்கத்தையும் பாரளுமன்றத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் இந்த கடமையை தவறவிட்டால் தற்போது நாடு முகம் கொடுத்திருக்கும் சாதாரண சூழ்நிலையை காட்டிலும் பாரிய துரதிஷடவசமான நிலை ஏற்படலாம் என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

அதனால் பாரளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்கள் உறுப்பினர்களும் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்வுகளை வழங்குவதற்கு முயற்சிக்க வேண்டியுள்ள அதே வேலை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய வகையில், சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் செயல்பட வேண்டும்.

இதன் போது அதி வணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் வழங்கி இருக்கும் பரிந்துரைகளுக்கு நாம்  இணக்கத்தை தெரிவிக்கும் அதேவேளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சிவில் சமூகங்கள் உள்ளிட்ட அறிஞர்கள் தொழில் வான்மையாளர்கள் பலர் முன் வைத்திருக்கும் பரிந்துரைகளையும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X