2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

‘அபாயப் பிரதேசங்களில் உள்ளோரை அனுப்போம்’

Editorial   / 2020 மே 11 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

மேல் மாகாணத்திலிருந்து இதுவரையில், சுமார் 2 ஆயிரம் பேர், அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன, எஞ்சியோரும் விரைவில் அனுப்பப்படுவார்கள் என்றார்.

மேல் மாகாணத்தில் சுகாதார அதிகாரிகளால், கொரோனா வைரஸ் அபாயப் பிரதேசங்களாக (சிகப்பு எச்சரிக்கை) இணங்கானப்பட்டுள்ளப் பிரதேசங்களில் உள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை, அவர்களது சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்பப் போவதில்லை எனவும் அவர் கூறினார்.

எதிர்வரும் சில வாரங்களில், மேல் மாகாணத்தில் தங்கயிருக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த எஞ்சியிருப்பவர்களும் விரைவில் உரிய சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு திருப்பியனுப்படுவார்கள் என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X