2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரசியலுக்கு அப்பால் சென்று சேவைகளை செய்யவேண்டும்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 01 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

தேசிய அரசியல் மற்றும் பிராந்திய அரசியலில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு முன்னோக்கி  செல்கின்றோம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்,
அரசியலுக்கு அப்பால் சென்று மக்களின் தேவை நிறைவேற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தினூடான நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல், கல்முனை பிரதேச செயலகத்தில் நேற்று (30) நடைபெற்றது. அதில் தலைமைத்தாங்கி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய அரசியலில் சவால் மிக்க ஒரு காலகட்டமாக காணப்படுகின்றது. நிதியமைச்சர் பெஷில் ராஜபக்ச, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மிக நுட்பமான முறையில்
இந்த வரவு- செலவுத் திட்டத்தை தயாரித்து வருகிறார்.

தேசிய அரசியல் மற்றும் பிராந்திய அரசியலில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு முன் நோக்கி  செல்கின்றோம். இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எவ்வாறாயினும் அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்பட்டு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது மிக மிக முக்கியமான விடயமாகும் என்று தெரிவித்தார்.

இதன் போது, பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 29 கிராமசேவையாளர் பிரிவுகளிலும் ஒரு  பிரிவுக்கு 30 இலட்சம் ரூபா ஒதுக்கீடு என்ற அடிப்படையில் 29 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன எனத் தெரிவித்தார்.

அத்துடன், இங்கு மேற்கொள்ளப்படவுள்ள உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரம் போன்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .