2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அஸ்வெசும கால அவகாசம் நாளையுடன் நிறைவு

Freelancer   / 2025 ஜூலை 20 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்காக மேன்முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளையுடன் (21) நிறைவடையுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

தற்போது இரண்டாம் கட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளர்களிடமிருந்து சுமார் 30,000 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக சபை கூறியுள்ளது.

குறித்த மேன்முறையீடுகள் பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு குழுவினூடாக மீளாய்வு செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X