2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆர்யன் கானுக்கு இன்று பிணை கிடைக்குமா?

Niroshini   / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் பிணை மனு மீதான விசாரணை, இன்று (27) மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
அவரது பிணை மனுவை நீதவான் நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமகன்றம் ஆகியன நிராகரித்த நிலையில், மும்பை உயர நீதிமன்றத்தில், பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கமைய, ஆர்யன் கானின் பிணை மனு மீது பதிலளிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு, உயர் நீதிமன்றம் உதரவிட்டு இருந்தது. அதன்படி, நேற்று (26), போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், உயர் நீதிமன்றத்தில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.
அதில், 'ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியது மட்டுமின்றி அவருக்கு போதைப்பொருள் கடத்தலிலும் தொடர்பு உள்ளது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார். இது தொடர்பாக வெளிநாட்டு ஏஜென்சிகள் மூலம் விசாரிக்க வேண்டியது உள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்ய வேண்டியது உள்ளது.

இந்த தருணத்தில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி உள்ளிட்டவர்கள் சாட்சிகளை கலைக்கும் வேலையில் ஈடுபட்டு, விசாரணையை நீர்த்து போக செய்ய முயற்சிக்கிறார்கள். எனவே ஆர்யன் கானுக்கு பிணை வழங்கக்கூடாது' என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்று மாலை நீதிபதி சாம்ப்ரே முன்னிலையில், பிணை மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்யன் கான் தரப்பில் ஆஜரான வக்கீல், 'ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யவில்லை, அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இந்நிலையில் அவரை கைது செய்து 20 நாள்களுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்திருப்பது தவறானது' என்று வாதிட்டார்.

இதையடுத்து, மனு மீதான விசாரணையை இன்றைக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .