2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இக்காலப்பகுதியிலேயே கூடுதல் அவதானம் தேவை

Editorial   / 2020 மே 11 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார விதிமுறைகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை தவறுவோர் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறியோராக கருதப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இக்காலப்பகுதியிலேயே கூடுதல் அவதானம் தேவை என குறிப்பிட்டுள்ள அவர், மக்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக, நாடளாவிய ரீதியில் பொலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அலுவலக செயற்பாடுகள் இன்று (11) முதல் வழமைக்குத் திரும்பியுள்ளன. எனினும் ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக அருகில் உள்ள வரத்தக நிலையங்களுக்கு நடந்துச் செல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளார். 

ஏனையோர் வீடுகளில் இருப்பது உகந்ததெனத் தெரிவித்துள்ள அவர் இன்று (11) அடையாள அட்டை இலக்க நடைமுறை அமலில் காணப்படும் எனவும் இதற்கமைய, இறுதி இலக்கம் 1,2 உள்ளவர்கள் மாத்திரம் அத்தியாவசிய தேவைக்காக வெளியேற முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X