2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரு வைரஸூகளும் நுரையீரலை தாக்குகின்றன

Freelancer   / 2022 ஓகஸ்ட் 11 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தற்போது பரவிவரும் BA.4 மற்றும் BA.5 கொரோனா வைரஸூகள் மிகவும் ஆபத்தானவை, இவ் வைரஸூகளானது  தொற்றாளர்களின்  நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் என  ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் வளவாளரும், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் வைரஸ் தொடர்பான வைத்திய ஆலேசகர் வைத்தியர்  சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார். 

இலங்கையில்  தற்போது பரவி வரும் BA.4 மற்றும் BA.5 கொவிட் -19 வைரஸ் தொற்றுகள் நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

அத்துடன் இதுவரை அடையாளம்  காணப்பட்டுள்ள கொவிட் வைரஸ்களில் மிகவும் வேகமாக பரவும் வைரஸாகும் என தெரிவித்துள்ள வைத்தியர் சஞ்சய் பெரேரா,   ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் இந்த வைரஸூகள் மிக வேகமாக பரவுகின்றன என்றார். 

தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வது ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான செயற்பாடாகும். அதேபோல் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதும் மிகவும் அவசியமானது. நாடு  எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் வைரஸ் பரவ  ஆரம்பிக்குமாயின் மிக மோசமான தாக்கங்களை மக்கள் முகங்கொடுக்க நேரிடும் என்றார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .