2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘இறையாண்மைக்கு சவாலானது’

Freelancer   / 2021 ஜூன் 25 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஒரு நாட்டில் நிதித்துறை செயல்மறை ஜனநாயக நிர்வாகத்தின் மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகின்றது. சட்டத்தின் இறையாண்மை மட்டுமல்லாது  இலங்கையின் சுதந்திரமும் இன்று சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பிலிருந்து தெளிவாகிறது” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான சரியான நடைமுறையை ஜனாதிபதி பின்பற்றியுள்ளாரா என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயற்பாடு பாராளுமன்றமும் நீதித்துறையும் அவர் விரும்பிய படி செயற்பட வேண்டுமென்பதைக் காட்டுவதாகவும் “இது ஜனநாயக ஆட்சிக்கு கடுமையான அச்சுறுத்தலாகும்” என்றார்.

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .