2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

இலங்கைக்கு உதவிய பாக்.; வான்வெளியை அனுமதித்த இந்திய

S.Renuka   / 2025 டிசெம்பர் 02 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிவரும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது வான்வெளியைப் பயன்படுத்த இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா- பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இடையில் விமானப் போக்குவரத்துக்கு வான்வெளியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இந்தக் கோரிக்கையை முன்வைத்த 4 மணி நேரத்திற்குள் இந்தியா இந்த அனுமதியை விரைவாக வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X