2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கைக்கு படையெடுக்கும் அதிகளவான வெளிநாட்டவர்கள்

Freelancer   / 2022 ஜனவரி 17 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 39,172 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதில் 6,963 பேர் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கொவிட் தொற்று பரவிய கடந்த வருடத்தில் 1,94,495 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 1,56,571 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ரஷ்யாவைத் தவிர, இந்தியா, உக்ரைன், ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், மாலைதீவு, அவுஸ்திரேலியா, போலந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 

மேலும், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .