2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்ல கப்பல் சேவை

Editorial   / 2020 மே 21 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு திரும்ப முடியாத நிலையில் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகளை மீட்கும் முயற்சியின் அடுத்த நகர்வாக, கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு, கப்பல் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக, இலங்கையில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு, ஜூன் 1ஆம் திகதி, 'ஐளே ஜலஸ்வா' என்ற கப்பல், கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு பயணிக்கவுள்ளது.

தமிழ் நாட்டைச்சேர்ந்த இந்திய பிரஜைகள், இந்தக் கப்பலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

'வந்தே பாரத்'' செயல்நோக்கின்கீழ், வெளிநாடுகளில் சிக்குண்டிருக்கும் இந்தியர்களை மீட்டுவருவதற்காக, இந்திய கடற்படைக் கப்பல்கள் சேவையில் அமர்த்தப்பட்டிருக்கும் 'சமுத்ர சேது' நடவடிக்கையின் அடுத்த கப்பல் பயணமாக இது அமையவுள்ளது. 

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில், இந்த கப்பலுக்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அவசரமாக நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு,  குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள்,  விசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா திரும்புவதற்கு கோரிக்கைகளை முன்வைத்திருப்போர், மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு, இப்பயணத்தில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

இந்த கப்பல் சேவை தொடர்பான விவரங்கள் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் பலர் நாடு திரும்புவதற்கான கோரிக்கையை முன்வைத்திருக்கும் நிலையில், பதிவு செய்யப்பட்டிருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களை மாத்திரமே இந்தக் கப்பலில் அனுமதிக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயணத்துக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் அறிவித்தல்கள் அனுப்பப்படவுள்ளன.

கப்பல் பயணத்துக்கான செலவீனத்தை பயணிகள் பொறுப்பேற்க வேண்டிய தேவையுள்ளதுடன் அவர்கள் இந்தியாவை சென்றடைந்ததும் கட்டாயமான தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3628470

நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள், இதுவரையில் தம்மை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய தவறியிருப்பின்  hவவிள:ஃஃhஉiஉழடழஅடிழ.பழஎ.inஃஊழுஏஐனு_hநடிடiநெ  இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கோரப்படுகிறார்கள்.

நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகள் பொறுமையைப்பேணுமாறும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம், சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அறிவித்தல்களை அறிந்துகொள்ளுமாறும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரிக்கை விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X