Janu / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கணினி பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை, கம்புருகமுவைச் சேர்ந்த 29 வயதுடைய வெலந்தகொட ஹேவகே சசித் தமால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர், பாணந்துறை, வலான பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் பாணந்துறை பகுதியில் உள்ள தனியார் கணினி பல்கலைக்கழகம் ஒன்றை நடத்தி வருவதாகவும், பாதிக்கப்பட்டவர் அவருக்குக் கீழ் பணிபுரிந்ததாகவும், நிதி தகராறு காரணமாக சந்தேக நபரின் வீட்டின் முன் வைத்து இக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

21 minute ago
41 minute ago
53 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago
53 minute ago
54 minute ago