2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’இழக்கக் கூடாதவற்றை இழந்துவிட்டோம்’

Freelancer   / 2022 மே 20 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஷ் 

எம்மிடம் இருந்த சொத்துக்களை அடகு வைத்தே அரசியலுக்கு வந்துள்ளோம். இன்னும் அடகு வைக்கப்பட்டவற்றில் மீட்க முடியாத சொத்துக்களும் உள்ளன. இவ்வாறு பல்வேறு அர்ப்பணிப்புகளை செய்து பயணித்த எமது அரசியல் பயணத்தில் இழக்கக் கூடாதவற்றை இழந்துவிட்டோம் என  முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார். 

தற்போதைய நிலைமையில் ஜனாதிபதி தனது பதவிக் காலம் முடிந்ததும் ஒதுங்கிக் கொள்வது சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (19)  நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்நிலையில், மே 9 ஆம் திகதி சம்பவம் தொடர்பில் கவலையடைகின்றேன். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. யாருடையதேனும் தவறான ஆலோசனையால் அது நடந்துள்ளது. அப்பாவி மக்களே அங்கு வந்துள்ளனர். 

அவர்கள் பிரதமர் பதவி விலகும் போது ஆசீர்வதிக்கவே வந்துள்ளனர். அதன்போது யாரோ அவர்களை தூண்டியுள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புக் கூற வேண்டும். அதன்பின்னர் வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். ஹம்பாந்தோட்டை பகுதியிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ராஜபக்‌ஷர்களின் அரசியல் வரலாறுகளை பார்க்க வேண்டும். 90 வருடங்களாக அரசியலில் இருக்கின்றோம். நாங்கள் இருந்த சொத்துக்களை அடகு வைத்தே வந்துள்ளோம். இன்னும் அடகு வைக்கப்பட்டவற்றில் மீட்க முடியாத சொத்துக்களும் உள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி தனக்கு இருக்கும் 2 வருடங்கள் நிறைவடைந்ததும் அவர் விடைபெறுவதே சிறந்தது. நாங்கள் கடந்த 50 வருட அரசியலில் பல்வேறு அர்ப்பணிப்புகளை செய்துள்ளோம். ஆனால் இப்போது அவற்றை இழந்துள்ளோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .