Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூலை 19 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் Kiryat Malakhi பிரதேசத்திற்கு அருகே நேற்று (18) காலை விவசாய நடவடிக்கைகளுக்காக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 20 இலங்கையர்கள் பயணித்துள்ளனர்.
பேருந்து தீப்பிடித்த பிறகு பேருந்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால், அவர்கள் அனைவரும் ஜன்னல்களை உடைத்து வௌியேறியுள்ளனர்.
விபத்தில் ஒருவரது காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், எனினும் அவரது நிலைமை மோசமாக இல்லை என்று நிமல் பண்டார குறிப்பிட்டார்.
மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் அவர்களின் செயல்பாடுகளை அவதானித்து வருவதாகவும், ஏனைய தரப்பினர் வழமை போன்று தங்களது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். R
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago