2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’உயர் கல்வி முறையில் மாற்றம் அவசியம்’

Editorial   / 2020 மே 16 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக கல்வியை நிறைவுசெய்து சமூகத்துக்குள் பிரவேசிக்கும் பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை உருவாக்க வேண்டுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் குறிப்பிட்டுள்ளார். 

பல்கலைக்கழக கல்வி பற்றி எத்தகைய வியாக்கியானங்கள் இருந்த போதும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் இளைஞர் யுவதிகளுக்கு தொழிலொன்றை தேடிக்கொள்ள முடியாதாயின் அது சரியான கல்வி முறையாக இருக்க முடியாது. 

பட்டதாரிகள் தொழில் கேட்டு ஊர்வலம் செல்வதற்கு பதிலாக தொழில்கள் அவர்களை தேடி வரும் கல்வி முறைமையே தேவையாகுமென, ஜனாதிபதி; சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் நேற்று (15) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடை;பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி; இதனை தெரிவிததுள்ளார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரிலேயே மீண்டும் திறக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைக் கல்வி முறைமையை மேலும் மேம்படுத்துவதற்கு இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். 

எதிர்காலத்தில் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தில் 30 சதவீதத்தினரையாவது இணைய வழிக் கல்விக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X