2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

உலக உணவுத் திட்டத்தின் பிரதானி இலங்கை வருகின்றார்

Freelancer   / 2022 ஜூலை 06 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

உலக உணவுத் திட்டம் மற்றும் உலக உணவு வேளாண்மை அமைப்பு ஒன்றிணைந்து இலங்கையின் உணவு நெருக்கடி நிலைமைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். அதேபோல் எனது அழைப்பின் பெயரில் உலக உணவுத் திட்டத்தின் பிரதானி அடுத்தவாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார். 

உலக உணவுத் திட்டம் மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து உணவு கிடைப்பதை அதிகரிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். தற்போது, அவர்களது பிரதிநிதிகள் குழு இலங்கையின் உணவு நெருக்கடி குறித்து ஆய்வு செய்து வருகிறது என்றார். 

மேலும் நாட்டுக்கும் மக்களுக்கும் சுமையாக மாறியுள்ள இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். இப்படி முப்பது நாற்பது வருடங்களாக மக்கள் மீது சுமையை ஏற்றுவது நியாயமா? தொடர்ந்து மக்கள் மீது சுமையை ஏற்றி இந்த நிறுவனங்களை நடத்த வேண்டுமா? இந்த நிறுவனங்கள் வழங்கும் சேவைகளை ஏன் மக்களுக்குச் சுமையின்றி வழங்க முடியாது? இந்த சேவைகளை வழங்க வேறு வழிகள் இல்லையா? இந்த அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனங்களை மறுசீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

அவை நாட்டுக்கு சுமை ஏற்படாத வகையில் பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்படும். தற்போதைய சவால்களை முறியடிப்பதற்கான நமது முன்னோக்கிப் பயணத்தில் இன்னும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .