2025 டிசெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

ஏழு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 07 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில தினங்களாகபெய்த தொடர் மழையால் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் ஏழு முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

கலா வாவி நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பொல்கொல்ல, ரன்தம்பே போன்ற கனியன் நீர்த்தேக்கங்களில் ஒரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

வெஹெரகல நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகளும், போவதென்ன நீர்த்தேக்கத்தில் ஆறு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பல நீர்த்தேக்கங்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், சுற்றியுள்ள பகுதிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X