2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’ஒமிக்ரோன் தொடர்பில் அச்சப்பட தேவையில்லை’

Nirosh   / 2021 நவம்பர் 28 , பி.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸின் புதிய திரபான ஒமிக்ரோன் வைரஸ் இலங்கைக்குள் பரவும் ஆபத்து காணப்படுவதாக  தெரிவிக்கும் இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன, இந்த வைரஸ் தொடர்பில் மக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஒமிக்ரோன் என்கிற கொரோனா வைரஸ் புதிய திரிபொன்று பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. டெல்டா வைரஸைவிட 500 மடங்கு வேகமாக ஒமிக்ரோன் வைரஸ் பரவும் எனவும், இந்த வைரஸ் இலங்கைக்குள் பரவும் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

ஒமிக்ரோன் வைரஸ் நாட்டுக்குள் பரவுவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இந்த வைரஸ் தொடர்பில் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்தார். 

இது இலங்கைக்கு மாத்திரமல்லாது உலக நாடுகள் அனைத்தும் தற்போது முகங்கொடுக்கிற பாரிய சவால் எனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .