2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒரு கைக்கடிகாரத்துக்கு இரண்டு ஆணுறைகள்

Editorial   / 2022 ஜனவரி 17 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இணையத்தள நிறுவனத்தில் கைக்கடிகாரம் ஒன்றையை பதிவு செய்த நபருக்கு ஆணுறைகள் இரண்டு வந்துள்ளது. இதனையால் அதிர்ச்சியடைந்த நபர், இதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் இந்த சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது.

 இன்றைய நவீன உலகில் எல்லாமே நமது விரல் நுனியில் உள்ளது. முன்பெல்லாம் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் குடும்பத்துடன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவார்கள்.

இதற்காக தனியாக ஒரு நாளையே ஒதுக்குவார்கள். இந்த காலமெல்லாம் மலையேறி போய் விட்டது. இப்போது நாம் விரும்பிய பொருளை இருக்கும் இடத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதி வந்து விட்டது.
 

எங்கு இருந்து என்ன பொருள் பதிவுசெய்தாலும், அந்த பொருள் நம்மை தேடி வந்து விடுகின்றன. இதற்காக எக்கச்சக்கமான இணையத்தள நிறுவனங்கள் கொட்டி கிடக்கின்றன. ஆனால் இப்படி பொருட்களை முன்கூட்டியே செய்யும்போது ஏகப்பட்ட தவறுகள் நிகழ்ந்து வருகின்றன. சில சமயங்களில் பொதிகளில் பொருட்களே இருக்காது. சில நேரம் நாம் பதிவு செய்யப்பட்ட பொருளுக்கு பதிலாக வேறு பொருள் வரும்.
 

இந்த நிலையில் கேரளாவில் இணையளத்தளத்தில் கைக்கடிகாரத்தை கொள்வனவு செய்யவிருந்த நபருக்கு வந்த பொதியில், ஆணுறைகள் இரண்டு இருந்துள்ளன.

  கேரள மாநிலம் எர்ணாகுளம் தட்டாங்குளத்தை சேர்ந்தவர் அனில்குமார்(32). இவர் இணையளத்தளத்தில் கைக்கடிகாரம் ஒன்றை பதிவு செய்துவிட்டு, அதற்காக   ரூ.2,400-ஐ முன்கூட்டியே செலுத்தினார். 15 ஆம் திகதி அவரது கைக்கு கைக்கடிகாரம் வந்து சேருமென இணையளத்தள நிறுவனம் கூறி இருந்தது.

குறிப்பிட்ட நாளில் அந்த இணையத்தள நிறுவனத்தில் இருந்து ​ஒரு பொதி வந்துள்ளது.  நமது புதிய கைக்கடிகாரம் எப்படி இருக்கிறது? என்பதை அறிவதற்காக அனில்குமார் அந்த பொதியை ஆர்வமுடன் பார்த்தார். அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் பொதியில் இருந்து சிறிய அட்டை பெட்டியில் 2 ஆணுறைகள்(கொண்டம்) இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

தண்ணீர் நிரப்பப்பட்ட நிலையில் ஒரு ஆணுறையும், மற்றொரு சாதாராண ஆணுறையாகவும் இருந்தது. அவற்றைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தே போனார். ''நான் கைக்கடிகாரம் தானே, முன்பதிவு செய்தேன். எப்படி இது வந்தது?'' என்று அவர் பொதியைக் கொண்டு வந்த நபரிடம் கேட்டார்.

 

அதற்கு அந்த நபர் '' இதில் எப்படி ஆணுறை (கொண்டம்) வந்தது என்று எனக்குத் தெரியாது. பொதியைக் கொண்டு சேர்ப்பது மட்டும்தான் எனது வேலை'' என்று கூறினார்.
 

 இதனை தொடர்ந்து அனில்குமார், கைக்கடிகாரத்தை பதிவு செய்த அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.  அவர்கள் உரிய பதிலை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் இதுபற்றி ஆலுவா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார், வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .