2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கடும் சிரமத்தில் இறக்குமதியாளர்கள்

Freelancer   / 2022 ஜனவரி 16 , பி.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் இறக்குமதியாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்தது.

அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், நேற்று (16) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

தற்போதைய டொலர் தட்டுப்பாடு காரணமாக குறித்த நேரத்தில் கொள்கலன்களை விடுவிக்க முடியாத காரணத்தினால் இறக்குமதியாளர்கள் அபராதம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

200 கொள்கலன்களை அகற்றும் போது, கொழும்பு துறைமுகத்தில் மேலும் 200 கொள்கலன்கள் தேங்குவதாகவும் இது தொடர்ச்சியான சுழற்சியாகும் என்றும் இதற்கு டொலர்கள் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மாதாந்த தவணைகளைச் செலுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது எனவும் முஜிபுர் எம்.பி தெரிவித்தர்.

எவ்வாறாயினும் சில டொலர்களை விடுவிப்பதன் மூலம் இந்த விடயத்தை தீர்க்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கருதுவதாக சுட்டிக்காட்டினார்.

நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருவதாகவும், இறக்குமதியாளர்கள் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பணம் செலுத்துவதில் தடுமாறும்போது, உள்ளூர் இறக்குமதியாளர்கள் மீது இறக்குமதியாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் களங்கமடைவதாகவும் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .