2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

’கம்மன்பிலவுக்குக் கழுத்தறுப்பு’

Nirosh   / 2021 ஜூன் 23 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்ட விவகாரத்தில், ஆளுங்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அமைச்சர் உதய கம்மன்பிலவை கழுத்தறுப்புச் செய்ய முயற்சிக்கிறதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார்.

ஆளுங்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு தெரியாமலும், ஜனாதிபதி, பிரதமருக்கு, அமைச்சரவைக்கு அறிவிக்காமல், எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்குமாக இருந்தால், அவ்வாறான தீர்மானத்தை எடுத்த ஜனாதிபதி, பிரதமர்,  அமைச்சரவையை விட பலமிக்க அந்த நபர் யாரெனவும் வினவினார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் கலந்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை மிகவும் குறைந்திருந்தது.

எனினும் உள்நாட்டில் விலைகள் குறைக்கப்பட்டாதென அப்போது கூறிய அரசாங்கம், உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்போது அதற்கான நிவாரணத்தை வழங்கி, உள்நாட்டில் எரிபொருள்களின்  விலைகளை அதிகரிக்கப்போவதில்லை எனவும் அரசாங்கம் கூறியதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .