2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கொழும்பில் நினைவேந்தல் ஊர்வலம்

Freelancer   / 2022 மே 18 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

2009ஆம் ஆண்டு இறுதியுத்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து கொழும்பு, காலிமுகத்திடலில் ஊர்வலம் இடம்பெற்றது.

அத்துடன், ஊர்வலத்தில் ஈடுபட்டோர், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஒன்றுகூடி நினைவேந்தல் உரைகளையும் ஆற்றிவருகின்றனர்.

இறுதி யுத்ததின் போது உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்காக, சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூவினங்களைச் சேர்ந்த மக்களும் கொழும்பு காலிமுகத்திடல் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டத் தளத்துக்கு முன்பாக ஒன்று கூடி, இன்று காலை நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது.

அத்துடன், அங்கு அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன், காலி முகத்திடல் கடற்கரையில் மலர் தூவப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் ஆர்ப்பாட்ட இடத்திலுள்ளோருக்கு பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(படம்: சமூக வலைத்தளம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X