2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குற்றவாளிகள் தப்பிக்க பொலிஸார் துணையா?

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

தலவாக்கலை- டயகம சிறுமியின் விடயத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தப்பிப்பதற்கு பொலிஸாரும் துணைபோகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆகையால்,
இதுதொடர்பில் அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் உரிய நடவடிக்கைளை எடுக்கவேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை விடுத்தார்.



இராதாகிருஸ்ணன் எம்.பி, தனது 69ஆவது பிறந்த நாளை, நேற்று (01) கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி, ம.ம.முவின் ஹட்டன் காரியாலயத்தில் சிறிய வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர், அங்கு கருத்துரைத்த போதே
மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இவ்வாறான சம்பவங்களால் இதற்கு முன்னரும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பாக அறிக்கையை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பெற்று, அவ்வறிக்கையின் பிரகாரம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது” என்றார்.

முன்னறிவித்தல் விடுத்ததன் பின்னர், வீடுகளில் பணியாற்றும் சிறுவர்களை பொலிஸார் கடந்தவாரத்தில் தேடியிருந்தனர். இது குற்றவாளிகளை பாதுகாக்கும் செயற்பாடாகவே தான் கருதுகின்றேன் என்றத் தெரிவித்த இராதாகிருஸ்ணன் எம்.பி, முன்னறிவித்தல் இன்றி சென்றால் மட்டுமே, குற்றவாளிகளை கைது செய்யமுடியும். முன்னறிவித்தலுடன் சென்றமை, கண்துடைப்பான ஒரு செயலாகும் என்றார்.

பாடசாலையைவிட்டு இடை விலகும் மாணவர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமாயின் சிறுவர்களுக்கு எதிரான இவ்வாறான துன்புறுத்தல்களை கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவித்த அவர், தங்களுடைய பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது தொடர்பில், பெற்றோர்களுக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது
என்றார்.

தனது கணவன், குடிபோதைக்கு அடிமையாவது தொடர்பில், பெருந்தோட்ட பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குற்றங்கள் அதிகரிப்பதற்கு, மதுபான சாலைகளிலும் நிரம்பி வலியும் கூட்டமும் முக்கிய காரணமாகிறது என்றார்.

“மலையகத்தின் நீண்ட கால அரசியல்வாதியாக நான் இருக்கின்றேன். ஆனால், எனக்கும் மதுபான விற்பனைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. எனவே, நான் இந்த விடயம்
தொடர்பாக துணிவுடன் நேர்மையாகவும் பேச முடியும்” என்றார்.

இந்த நிலைமை எங்களுடைய முற்போக்கு கூட்டணியிலும் அனைவருக்கும் இருக்கின்றது எனத் தெரிவித்த இராதாகிருஸ்ணன் எம்.பி, யாரும் மதுபான விற்பனையிலோ அல்லது அது தொடர்பான செயற்பாடுகளிலோ ஈடுபடுபவர்கள் நாங்கள் அல்லர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .