2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சகல மாணவர்களுக்கும் கல்வியை வழங்க நடவடிக்கை

Editorial   / 2020 மே 20 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொலைதூர கல்வி முறையின் ஊடாக 60 சதவீதமான பாடசாலை மாணவர்களே சலுகைகளை பெற்றுக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் எவ்வித தொலைதூர கல்வி வசதிகளையும் பெற முடியாத 40 சதவீதமான மாணவர்களும் ஏதேனும் ஒரு முறைமையினூடாக கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதனை, கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எச்.என். சித்ராநந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலை மட்டத்தில் அச்சிடப்பட்ட கற்றல் தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய கையேடுகளை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மாகாணக் கல்வி அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் அனைத்து மாணவர்களுக்கும் பொருத்தமான கற்றல் முறைமையினூடாக கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X