2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்காத நாடுகளே இல்லை

Ilango Bharathy   / 2021 நவம்பர் 27 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிட்ரோ எரிவாயு நிறுவனம்இ வருடமொன்றுக்கு 350 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை தயாரித்து, சந்தைக்கு அனுப்புகின்றது. அதில், ஐந்து அல்லது ஆறு விபத்துக்கள் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்காத நாடுகளே இல்லை என்றார்.

லாப் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்களின் ஊடாக, 2015ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும், வீடுகளில்- 12, வியாபார நிலையங்களில்- 9, எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையங்களில்- 2 என விபத்துகள் பதிவாகியுள்ளன.

நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் நேற்று (26) இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட போதே, மேற்கண்டவாறு
தெரிவித்த அவர், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு காரணமாக விபத்து
சம்பவிக்காத நாடுகள் ஏதும் கிடையாது என்றார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் பாவனையில் இருந்து நுகர்வோரை பாதுகாப்பதற்காக நுகர்வோர் அதிகார சபை எரிவாயு சிலிண்டர், எரிவாயு குழாய், சிலிண்டரில் பொருத்தப்பட்டுள்ள இணைப்பு ஆகியவற்றின் தரங்கள் தொடர்பில், 2012ஆம் ஆண்டு 5 வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

எரிவாயு சிலிண்டரின் கலவை மற்றும் தரம் தொடர்பில் இலங்கை
பெற்றோலிய கூட்டுத்தாபனமும், தனியார் நிறுவனமும் ஒன்றினைந்து
பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன எனத் தெரிவித்த அவர்,
எரிவாயு சிலிண்டர் தொடர்பில் காணப்படும் சர்ச்சைக்கு இன்னும் இரண்டு
வார காலத்திற்குள் தீர்வு முன்வைக்கப்படும் என்றார்.

எரிவாயு சிலிண்டரின் தரத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி வெளியிடல்
மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பிலான சட்டத்தை அமுல்படுத்தல்
தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த

அவர், எரிவாயு சிலிண்டர் வெடிப்பு மற்றும் அதனால் ஏற்படும்
விபத்துக்களை முழுமையாக இல்லாதொழிப்பது அரசாங்கத்தின் பிரதான
இலக்காகும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .