2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சூரியனைச் சுற்றி ஓர் ஒளி வட்டம்

Editorial   / 2021 ஜூலை 30 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தென் பகுதியின் சில இடங்களில் ​ சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் தென்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிடுவதற்கும் மக்கள் ஆர்வம் காட்டியிருந்தனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன ர், “இந்த நிலைமைக்கு நாங்கள் சூரிய மண்டலம் என்றே பெயரிட்டுள்ளோம். நீராவி மேல்நோக்கிச் செல்லும்போது, ​​அது பனி படிகங்களாக மாறும். இலங்கையில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக உயர் வளிமண்டலத்தில் மிகக் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

“இதனால் அங்குள்ள நீர் சிறிய பனித்துகளாக மாறி, சூரிய ஒளியை இவ்வாறு திரிபடைய செய்து வெளிப்படுத்துகிறது. அவை சூரியனை சுற்றி வெள்ளை வட்டத்தை ஏற்படுவதனை அவதானிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். (படங்கள்: சமூக வலைத்தளம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .