2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘சர்வாதிகாரத்துக்கு எடுத்துக்காட்டு’

Ilango Bharathy   / 2021 ஜூன் 21 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீட், அ.அச்சுதன்

“ஏறாவூரில் தமது அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவற்காக வீதிக்கு வந்த பொதுமக்கள் சிலரை, வீதியில் முட்டுக்காலில் நிற்க வைத்த சம்பவம், நாடு சர்வாதிகாரத்தை நோக்கிப் போவதை எடுத்துக்காட்டுகின்றது” என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (20) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இந்த நாடு ஜனநாயக நாடு. சட்ட ஆட்சி அமுலில் உள்ள நாடு. எனவே, எல்லாவற்றையும் சட்ட ரீதியாகவே அணுக வேண்டும். அதுவும் சட்டத்தின் முன்
யாவரும் சமம் என்ற அரசியலமைப்பு வாசகத்துக்கமைய எல்லோருக்கும் சட்டம்
அமுல்படுத்த வேண்டும். பாராபட்சம் காட்டக்கூடாது.

“ஏறாவூர் சம்பவம் சட்டத்துக்குப் புறம்பானது. மனிதாபிமானமற்றது. ஒவ்வொருவருக்கும் சுய கௌரவம் உள்ளது. வீதியில் முட்டுக்காலில் நிற்க வைக்கப்பட்ட இச்சம்பவம் அவர்களது சுய கௌரவத்தை கொச்சைப்படுத்துகின்றது.

“பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதாகக் கூறப்பட்டாலும் நாடு முழுவதும் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வீதிகளில் உலாவுகின்றன. அதேபோல, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் வீதிகளில் பயணிப்பதை நாம் காண்கிறோம்.

“இந்நிலையில், ஏறாவூர் மக்களை மட்டும் வதைக்கின்ற இச்செயல் நாட்டில் நியாயமான சட்ட ஆட்சி இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது”எனக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .