2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறுமியின் சடலத்தை தோண்டி எடுக்க அனுமதி

Freelancer   / 2021 ஜூலை 26 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைசெய்தபோது, எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்த தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான  உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

ரிஷாட் பதியுதீனின் மனைவி,மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரர் சிறுமியை வேலைக்கு சேர்த்த இடைத்தரகர் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து புதிய சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை பெற வேண்டும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X