2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சீ.ஐ.டியில் டி.ஐ.ஜி தேசபந்து தென்னகோன்

Freelancer   / 2022 மே 17 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 9ஆம் திகதியன்று கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமவில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) தேசபந்து தென்னகோன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிவருகிறார்.

இந்த சம்பவத்தையடுத்து, கடந்த 10ஆம் திகதியன்று, கங்காராமை பிரதேசத்தில் வைத்து தேசபந்து தென்னகோன் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது பொதுமக்கள் குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டார்.

இதனையடுத்து மக்களைக் கலைப்பதற்காக பொலிஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

கோட்டாகோகமவில் அமைதியானப் போராட்டக்கார்கள் தாக்கப்படுவதற்கு முன்னர் ஆளுங்கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவும் தேசபந்து தென்னகோனும் காலிமுகத்திடல் வீதியில் ஒன்றாக நடந்து வரும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

அத்துடன், போராட்டக்காரர்கள் மீதான குண்டர்களின் தாக்குதலை தடுக்க தவறியமைக்காக தேசபந்து தென்னகோன் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .