2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சீன உர விவகாரம்; மேலுமொரு தடையுத்தரவு

Freelancer   / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கோரிக்கையை அடுத்து, சீன நிறுவனமான குவின்ங்டாவோ சீவின் பயோடெக் குருப் கம்பனி, அதன் உள்ளூர் முகவர் மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றுக்கு எதிராக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம், இன்று (26) மற்றுமொரு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

 சீன நிறுவனமான குவின்ங்டாவோ சீவின் பயோடெக் குருப் கம்பனி (Qingdao Seawin Biotech Group Co.) என்ற நிறுவனத்துக்குத் திறக்கப்பட்ட கடன் கடிதத்தின் (Letter of Credit) கீழ், மக்கள் வங்கியின் மூலம் எவ்விதக் கொடுப்பனவுகளையும் வழங்க முடியாது.

மேற்படி சீன நிறுவனம் மற்றும் அதன் உள்நாட்டு முகவர் ஆகியோர், இந்தக் கடன் கடிதத்தின் கீழ் எவ்விதக் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில், வர்த்தக மேல் நீதிமன்றத்தினால், ஏற்கெனவே இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை (National Plant Quarantine Service) மூலம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகள் பரீட்சிக்கப்பட்டுள்ளதுடன், பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒருசில பக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்கள் அதில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .