2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

செம்மணியிலும் விக்கிக்கு தடை

Editorial   / 2020 மே 18 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை செம்மணியில் நடத்துவதற்கு வடக்கு மாகாணத்தில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முயற்சித்த போதும் அதனை பொலிஸார் அனுமதிக்கவில்லை.

நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதாக பொலிஸார் தெரிவித்த நிலையில், அதனை மதித்து நிகழ்வை நடத்தாமல் விக்னேஸ்வரன், அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

முன்னதாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த சென்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், கேரதீவில் வைத்து இராணுவத்தால் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த நிலையிலேயே செம்மணியில் இன்று காலை 8.30 மணியளவில் நினைவேந்தலை நடத்த முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முயற்சித்தார்.

எனினும் அங்கு வந்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர், நிகழ்வை நடத்த தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X