2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஜூன் மாதத்தில் ரூ5,000 கிடைக்காது

Editorial   / 2020 மே 21 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு, அரசாங்கத்தால் நிவாரணக் கொடுப்பனவாக வழங்கப்பட்ட 5,000 ரூபாயை ஜூன் மாதம் வழங்காமல் இருப்பதற்கு, அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று (20) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, அமைச்சரவையின் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாதத்தில், 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவது அரசியல் முயற்சியாக அமையலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் ஆராய்ந்துப் பாரக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ.ஜயசுந்தரவுக்கு, 17 ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் நேற்று (20) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டதாகவும் இந்தக் கொடுப்பனவை வழங்குவது அரசியல் முயற்சியாக அமையலாம் என்பதைக் கருத்திற்கொண்டு, ஜூன் மாதத்தில் கொடுப்பனவை வழங்காமல் இருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சரவையின் பேச்சாளர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X