2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜூலை 4, 5 க்கான மின் வெட்டு அட்டவணை

Freelancer   / 2022 ஜூலை 03 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (04) மற்றும் நாளைமறுதினம் (05) 3 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இன்று (03) அறிவித்தது.

அதற்கமைய, ஏ முதல் டபிள்யூ ஆகிய 20 வலயங்களில் பகல் வேளையில் 1 மணி நேரம் 40 நிமிடங்களும், இரவு வேளையில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின் வெட்டு  அமல்படுத்தப்படவுள்ளது என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சீசீ வலயங்களில் காலை 6 மணிமுதல் 8.30 மணிவரையான காலப்பகுதியில்  2 மணிநேரம் 30 நிமிட மின்வெட்டும், எம்,என்,ஓ,எக்ஸ்,வை, ஸெட் ஆகிய வலயங்களில் காலை 5.30 மணிமுதல் 8 மணிவரை 3 மணிநேர மின்வெட்டும் அமுலாகும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .