2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

டயகம மயானத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு

Editorial   / 2021 ஜூலை 27 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். கிருஸ்ணா, ரஞ்சித் ராஜபக்‌ஷ

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்தபோது தீக்காயங்களுக்கு உள்ளாகி  உயிரிழந்த சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள டயகம தோட்டத்தின் பொது மயானத்துக்கு இன்று (27)  முதல் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று  (26) தமது மகளின் மரண பரிசோதனை அறிக்கையில் சந்தேகம் இருப்பதாகவும், மகளின் சடலத்தைத் தோண்டி, மீளவும் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டுமென, சிறுமியின் பெற்றோர், கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

இந்த நிலையில்,  இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில், நேற்று முன்தினம் (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

  சிறுமியின் சடலத்தை  மீண்டும் தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு மீளவும் உட்படுத்துமாறு,  கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய உத்தரவிட்டார். 

இதற்கமைய, சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் டயகம பொலிஸாரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், டயகம பிரதேசத்தைச் சேர்ந்த பலர், ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்துள்ளதால் அவர்களிடம் விசாரணையை முன்னெடுக்க , கொழும்பு வடக்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு டயகம பிரதேசத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .