2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம்

Editorial   / 2020 மே 10 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மழையுடனான வானிலை ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயமுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு காய்ச்சலால் 18,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அவர் கூறியுள்ளார்.

நீர் தேங்கும் பகுதிகளை அடையாளங்கண்டு, டெங்கு நுளம்புகள் பெருகாத வகையில் மக்கள் செயற்பட வேண்டும் எனவும் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X