2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தடுக்கும் கோரிக்கையை நிராகரித்தது முல்லைத்தீவு நீதிமன்றம்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 27 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 72 பேருக்குத் தடை
உத்தரவுகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு,முள்ளியவளை ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி ஐயன்குளம், புதுக்குடியிருப்பு ஆகிய ஏழு போலிஸ் நிலையங்களால்
நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததற்கு அமைவாக குறித்த 72
பேருக்கு தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தது.

இந் நிலையில, தடைக்கட்டளைகளில் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவர்களில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் பாராளுமன்றம் உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, கரைதுறைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், புதுக்குடியிருப்புப் பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன், சமூகசெயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் ஆகியோர், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான தடை உத்தரவை நீக்குமாறு நேற்று முன்தினம் (25) நகர்த்தல்பத்திரம் ஊடாக
நீதிமன்றினைக் கோரியிருந்தனர்.

இந்நிலையில் பிரதிவாதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை ஆராய்ந்த நீதிபதி ரி.சரவணராஜா, தடைசெய்யப்பட்ட இயக்கமொன்றின் நிகழ்வினை நினைவுபடுத்தக்கூடியதாக நினைவுகூரல்களை மேற்கொள்ளமுடியாது. ஆனால், இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ளமுடியும் எனவும் மாவீரர் நாள் தடைக்கட்டளையைத் திருத்தியமைத்துக் கட்டளை பிறப்பித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 26.11.2021இன்று, நினைவேந்தல் செயற்பாடுகளைத் தடைசெய்யுமாறு ​பொலிஸார் நகர்த்தல்பத்திரம் ஊடாக நீதிமன்றினைக் கோரியிருந்தனர். பொலிஸாரின் கோரிக்கையினை மறுத்த நீதிமன்றம் 25.11.2021அன்று வழங்கிய திருத்திய கட்டளையை தொடர்ந்தும் நீடித்து உத்தரவு பிறப்பித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .