2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து எவரும் வரவில்லை

Ilango Bharathy   / 2021 நவம்பர் 29 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாகக் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் கொரோனா மாறுபாட்டின் அச்சுறுத்தல் காரணமாக, நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்ட ஆறு தென்னாபிரிக்க நாடுகளின் சுற்றுலாப் பயணிகள், கடந்த 14 நாட்களாக நாட்டுக்கு வரவில்லை என, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

தென்னாபிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, சிம்பாப்வே, லெசோதோ மற்றும்
சுவாசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள், கடந்த 14 நாட்களாக நாட்டுக்கு வரவில்லை என்றும், ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக, நேற்று (28) நள்ளிரவு முதல் நாட்டுக்குள் நுழைய அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 14 நாட்களில் இந்த நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தவிர வேறு எவரும் நாட்டுக்கு வந்துள்ளார்களா என்பது குறித்து உரிய திணைக்களங்கள் ஆராயும் எனவும் அதற்கேற்ப சுகாதாரத்துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

தடை செய்யப்பட்ட 6 நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தடையும் இல்லை என்றும் விசா வழங்கும்போது மேற்குறிப்பிட்ட பயணிகள் சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்களா
என்பதை அதிகாரிகள் பரிசோதிப்பார்கள் என்றார்.

நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 90% பேர் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், சுகாதாரப் பரிந்துரைகளுக்கு இணங்க புதிய வழமை மயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் மக்களைப் பாதுகாப்பதற்கும் நாட்டைப் பேணுவதற்கும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X