2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தமிழ்மிரர் வீடியோவை அடுத்து ஜீவன் அதிரடி நடவடிக்கை

Freelancer   / 2021 ஜூலை 12 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்திலுள்ள சில பின்தங்கிய பிரதேச மக்களுக்காக 4 மில்லியன் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் வழங்கியுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவிச் செயலாளரும் இராஜாங்க அமைச்சின் பரஜாசக்தி அபிவிருத்தித் திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாக குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அல்லற்படும் அவலநிலையை தெரிவிக்கும் வீடியோ ஒன்றை  கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழ் மிரர் மற்றும் டெய்லி மிரர் ஊடகங்கள் தமது இணைய தளத்திலும் சமூக ஊடகத்திலும் வெளியிட்டிருந்தன.

இந்த வீடியோவை வெளியிட்டு இவ்விடயத்தை தனது கவனத்துக்குக் கொண்டுவந்தமைக்கு தமிழ் மிரர் மற்றும் டெய்லிமிரருக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ள பாரத் அருள்சாமியின் மூலமாகவே மேற்குறிப்பிட்ட நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

அம்பக்கோட்டே, அளுத்வத்த, ரணகால, கெங்கல்ல, பன்வில, கெலேபொக்க, தெல்தோட்ட, கலஹா மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கு பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .