2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

திருடர்கள், மோசடிகாரர்கள் கால்தடங்கள் பதிந்த இடம்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 01 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முன்னர் திருடர்களும் மோசடியில் ஈடுபட்டவர்கள்
மாத்திரமே வந்து சென்றதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்
மனுஷ நாணயக்கார, ஆனால் இப்போது உண்மையை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களும்
பாராளுமன்ற உறுப்பினர்களும் இங்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். அது
இவர்களின் கடமையாகியுள்ளது என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ, செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி,
தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தரவுகள் அழிக்கபட்டமை தொடர்பில்
வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரிக்கவே, அவர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நேற்று (30)
அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், தமது கூற்றையும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கேட்பதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகின்றார்.

அப்படியாயின் யாருடைய தேவைக்காக இந்த விடயங்கள் அரங்கேற்றப்படுகின்றன என எமக்கு தெரியாது. ஒரு சில வர்த்தகர்கள் மீதும் திருட்டுகள் பகிரங்கப்படுத்தப்படுவதை வினவுவதற்காக இங்கு அழைக்கப்படுகின்றனரா எனும் எண்ணம் எமக்கு ஏற்படுகின்றது.

என்.எம்.ஆர் தரவுகளை அழித்ததாக ஒருவரைக் கைதுசெய்தார்கள். இதனை வெளிப்படுத்திய
எம்மையே இங்கு விசாரணைகளுக்கு அழைக்கின்றனர். நாட்டிற்காக இவற்றுக்கு பதிலளிக்க நாம் தயார்.முக்கியதுவம் வாய்ந்த தரவுகள் இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பின் ஓர் அங்கமாகும்.

இவற்றைப் பாதுகாப்பதற்கு எம்மால் ஆன ஒத்துழைப்புகளை நாம் வழங்குவோம் என்றார்
இதன்போது கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்த நாட்டின் தேசிய
தரவுகள் தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புபட்ட பிரிவாகும்.

பாதுகாக்கப்பட வேண்டிய தரவு ஒன்று தந்திரமாக அழிக்கப்பட்டமை தொடர்பில் உண்மையை வெளிபடுத்திய மனுஷ நாணயக்காரவை இன்று குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்திருக்கின்றனர்.

அதேப்போல் ஊடகவியலாளர்களும் இங்கு அழைக்கப்படும் நிலையில், ஏனையவர்கள் எவ்வாறு
நடத்தப்படுவார்கள் என்பதை எம்மால் புரிந்துக்கொள்ள முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .