2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

திருப்பி அழைக்குமாறு இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்கள் கோரிக்கை

Editorial   / 2020 மே 14 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்துள்ள தங்களை, மீளவும் நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய மத்திய அரசாங்கத்திடம், இந்தியத் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில், கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு 8 பேர் வருகை தந்ததாகவும் அவர்களில் மூவர் கிளிநொச்சியிலும் ஐவர் முல்லைத்தீவிலும் தங்கியுள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையிலேயே தங்கியிருக்க வேண்டியநிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும், தாம் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் தம்மை தமது குடும்பத்தினருடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் மதுரையிலிருந்து இலங்கைக்கு வந்த தாம், மீண்டும் நாடு செல்வதற்கான விருப்பம் இருந்தும் செல்ல முடியாத நிலையில் இங்கு உள்ளதாகவும் இவ்வாறான நிலையில் தம்மைத் தாய் நாட்டுக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X