2025 ஜூலை 21, திங்கட்கிழமை

’திருமணங்கள் நடத்துவது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை’

Editorial   / 2020 மே 21 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமண நிகழ்வுகளை நடத்துவதுத் தொடர்பில் எவ்வித விசேட அறிவித்தல்களும் வெளியிடப்படவில்லை என்று, சுகாதார அமைச்சு தெரவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, மக்கள் ஒன்றுக்கூடும் வகையிலான நிகழ்வுகளைத் நடத்துவதற்கு தடை தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக, சில ஊடங்களில் செய்திகளில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இது தொடர்பில் பலரும் தொடர்புகொண்டு கேட்பதாகவும் எனினும் அவ்வாறான எந்த அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் லக்ஸமன் கம்லத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட அறிவித்தலே, தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X