2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள்

Freelancer   / 2022 மே 29 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திறந்த கணக்குகள் மூலம் இறக்குமதி செய்வதை தடை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சுமார் 500 கொள்கலன்கள் விடுவிக்க முடியாதுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வெங்காயம், உருளைக்கிழங்கு, பூண்டு, பருப்பு, உலர் உணவுப் பொருட்கள் போன்ற இலகுவில் பழுதடையும் அத்தியாவசிய பொருட்கள் இதில் காணப்படுகிறது எனவும் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த கொள்கலன்களுக்கு மேலதிகமாக, டொலர் பிரச்சனை காரணமாக சுமார் 300 முதல் 400 கொள்கலன்களில் உணவு கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கி கிடப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .