2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தேசிய பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும்?

Freelancer   / 2021 டிசெம்பர் 03 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

சமையலறையின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அரசாங்கத்தால், தேசிய பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும் என கேள்வி எழுப்பிய தேசிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்களில், 9.5 கிலோ கிராம் நிறை கொண்ட எரிவாயுவை நிரப்பியமையே, எரிவாயு வெடிப்புகளுக்குக் காரணம் எனவும் தெரிவித்தார். 

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்களில், 9.5 கிலோ கிராம் நிறை கொண்ட எரிவாயு நிரப்பட்டுள்ளதோடு, எரிவாயு கலவைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டமையே நாடு முழுவதிலும் ஏற்படும் வெடிப்புகளுக்குக் காரணம் என்றார். 

இதுவொரு ஆபத்தான விடயம், இது தொடர்பில் ஜனாதிபதி விரைந்து செயற்படாது, இரு  வாரங்களில் அறிக்கையை பெற்று தீர்வை வழங்குவதாகக் கூறுகிறார். ஆபத்தான இந்த சிலிண்டர்கள் சந்தைகளில் இருந்து மீளப்பெறப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கி அதற்கு விசேட வரிச்சலுகை வழங்குவதற்கான யோசனைக்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எம்.பி.க்கள் எதிராக வாக்களிக்கவில்லை. எனவே அந்த துறைமுக விற்பனைக்கு மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரும் பொறுப்பேற்கவேண்டும். அன்று அதற்கு எதிராக ஜே.வி.பி. மாத்திரமே வாக்களித்தது.

இன்று பெரும்பாலான தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி செய்துக்கொடுக்கப்படாதபோதும் பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து ஏனைய இடங்களுக்கு குடிநீர் திட்டங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

உரிய வேதனம் கிடைக்காமல், கோதுமா மாவின் விலையதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள, நாட்டுக்கு அதிக அந்நிய செலவாணியை பெற்றுக்கொடுக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு குடிநீரையாவது பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .